அமெரிக்காவில் ‘போயிங்’ நிறுவன உயர் அதிகாரிகளுடன் ராஜ்நாத்சிங் சந்திப்பு


Image Courtesy: PTI
x
Image Courtesy: PTI
தினத்தந்தி 12 April 2022 2:36 AM GMT (Updated: 12 April 2022 2:36 AM GMT)

அமெரிக்காவில் ‘போயிங்’ நிறுவன உயர் அதிகாரிகளை ராஜ்நாத்சிங் நேற்று சந்தித்தார்.

வாஷிங்டன், 

ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங்கும், மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரும் நேற்று முன்தினம் அமெரிக்கா போய்ச் சேர்ந்தனர். அமெரிக்க ராணுவ, வெளியுறவு மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர்கள் சென்றுள்ளனர். 

இந்நிலையில், வாஷிங்டனில் அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான ‘போயிங்’ நிறுவனம், பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனமான ‘ரேதியான்’ ஆகியவற்றின் உயர் அதிகாரிகளை ராஜ்நாத்சிங் நேற்று சந்தித்து பேசினார்.

இந்தியாவில் அமலில் உள்ள கொள்கைகளை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்பதில் இருந்து ‘உலகத்துக்காக தயாரிப்போம்’ என்ற திட்டத்தை நோக்கி நடைபோடுமாறு அந்த நிறுவனங்களுக்கு ராஜ்நாத்சிங் அழைப்பு விடுத்தார்.

Next Story