எரிபொருள் விலை உயர்வு; நைஜீரிய விமான சேவை மே 9 முதல் தற்காலிக ரத்து


எரிபொருள் விலை உயர்வு; நைஜீரிய விமான சேவை மே 9 முதல் தற்காலிக ரத்து
x
தினத்தந்தி 7 May 2022 3:41 PM GMT (Updated: 7 May 2022 3:41 PM GMT)

எரிபொருள் விலை உயர்வை முன்னிட்டு நைஜீரிய விமான நிறுவனங்கள் மே 9 முதல் அடுத்த அறிவிப்பு வெளியிடும் வரை தற்காலிக ரத்து செய்யப்படுகின்றன.





அபுஜா,


உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வரும் சூழலில் எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இது சர்வதேச அளவில் எதிரொலித்து உள்ளது.  இந்த விலை உயர்வை முன்னிட்டு நைஜீரிய விமான நிறுவனங்களின் சேவை மே 9 (நாளை மறுதினம்) முதல் அடுத்த அறிவிப்பு வெளியிடும் வரை தற்காலிக ரத்து செய்யப்படுகின்றன.

அரசு முயற்சி எடுத்தபோதும், தொடர்ந்து எரிபொருள் விலை உயர்வடைந்து வருகிறது.  இதனால், நீடித்த விமான சேவையை தொடர முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது என இதுபற்றிய அறிவிப்பு தெரிவிக்கிறது.

அந்நாட்டு பணமதிப்பின்படி விமான எரிபொருள் லிட்டர் ஒன்றுக்கு 190 நைராவில் இருந்து திடீரென 700 நைராவுக்கு உயர்த்தப்பட்டு உள்ளது.

குறைந்த காலஅளவில் இதுபோன்ற வானுயர்ந்த விலை உயர்வால் ஏற்பட்ட திடீர் அதிர்ச்சியை உலகில் உள்ள எந்த விமான நிறுவனமும் ஏற்க முடியாது என அறிக்கை தெரிவித்து உள்ளது.  இதனால், பயணிகள் தங்களது விமான பயணத்தின்போது நைஜீரிய விமான நிலையங்களில் சிக்கி தவிக்காமல் இருக்க அந்த பயண வழிகளை தவிர்க்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story