கெர்சன் நகரில் 4 பேர் பலி; அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டு


கெர்சன் நகரில் 4 பேர் பலி; அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல்:  ரஷியா குற்றச்சாட்டு
x

ரஷியாவுடன் இணைத்த பகுதிகளில் இருந்து வெளியேறும் குடிமக்கள் மீது அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி நடத்திய தாக்குதலில் உக்ரைனியர்கள் 4 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என ரஷியா குற்றச்சாட்டு கூறியுள்ளது.கீவ்,


உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரானது 8 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இந்த படையெடுப்பின் ஒரு பகுதியாக உக்ரைனின் 4 முக்கிய பகுதிகளை ரஷியா ஆக்கிரமிப்பு செய்துள்ளது.

இதன்படி, டோனெட்ஸ்க், லுகான்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோரிஜியா ஆகிய 4 பகுதிகளை கைப்பற்றிய ரஷியா அவற்றை தன்னுடன் இணைத்து கொண்டது. இதனை, ரஷிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின்போது, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டது. இவற்றில் ஒன்றான கெர்சன் நகரில் நடந்த ஏவுகணை தாக்குதலில் குடிமக்களில் 4 பேர் உயிரிழந்தனர். இதற்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி கெர்சன் நகருக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ரஷியாவின் துணை கவர்னர் கிரில் ஸ்டிரெமவுசவ் கூறும்போது, ரஷியாவுடன் இணைந்த பகுதிகளில் இருந்து வெளியேற கூடிய பொதுமக்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு அமெரிக்கா வினியோகித்த ஹிமர்ஸ் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துகிறது என குற்றச்சாட்டு தெரிவித்தது. இதுபற்றி உக்ரைனிய அதிகாரி ஒருவர் கூறும்போது, தாக்குதல் நடந்த விசயங்களை ஒப்பு கொண்டார்.

ஆனால், குடிமக்களுக்கு தடை விதிக்கப்பட்ட பின்னரே தாக்குதல் நடத்தப்பட்டது என அவர் கூறியுள்ளார். எனினும், இந்த தாக்குதலுக்கு எந்த ரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்ற விவரங்களை அவர் கூறவில்லை.


Next Story