ஆப்கானிஸ்தான்: மசூதிக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு - ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி


ஆப்கானிஸ்தான்: மசூதிக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு - ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
x

கோப்புப்படம்

ஆப்கானிஸ்தானில் மசூதிக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியாகினர்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மத்திய பகுதியில் உள்ள கவ்ஜா ரவாஷ் என்கிற இடத்தில் மசூதி ஒன்று உள்ளது. நேற்று மதியம் இந்த மசூதியில் வழக்கம் போல் தொழுகை நடைபெற்றது. அந்த பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் பலர் மசூதிக்கு வந்து தொழுகை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது மசூதிக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த பயங்கரவாதிகள் சிலர் தொழுகை செய்து கொண்டிருந்தவர்களை சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓடினர். இந்த கொடூர தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.


Next Story