பாகிஸ்தானில் பள்ளிக்கூடம் அருகே குண்டு வெடிப்பு


பாகிஸ்தானில் பள்ளிக்கூடம் அருகே குண்டு வெடிப்பு
x
தினத்தந்தி 5 Dec 2023 11:45 PM GMT (Updated: 5 Dec 2023 11:46 PM GMT)

இந்த குண்டு வெடிப்பில் 4 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் பெஷாவர் நகரில் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு வழக்கம்போல் நேற்று வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தன. இந்த நிலையில் திடீரென அந்த பள்ளிக்கூடம் அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

இந்த தாக்குதலில் 4 மாணவர்கள் உள்பட 7 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story