ஊழல் குற்றச்சாட்டு: ஜப்பானில் ஆளுங்கட்சி அலுவலகங்களில் திடீர் சோதனை


ஊழல் குற்றச்சாட்டு: ஜப்பானில் ஆளுங்கட்சி அலுவலகங்களில் திடீர் சோதனை
x
தினத்தந்தி 21 Dec 2023 2:11 AM GMT (Updated: 21 Dec 2023 4:33 AM GMT)

ஜனநாயக லிபரல் கட்சியின் தேசிய தலைவர் பதவியை புமியோ கிஷிடா ராஜினாமா செய்தார்.

டோக்கியோ,

ஜப்பானில் ஜனநாயக லிபரல் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தேர்தல் நன்கொடை நிதியை ஆளுங்கட்சி எம்.பி.க்கள் தங்களுடைய சொந்த காரணங்களுக்காக செலவு செய்வதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உத்தரவிட்டார்.

இதற்கிடையே நன்கொடை நிதியை ஊழல் செய்ததாகக்கூறி 4 மந்திரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை நேர்மையாக நடப்பதை உறுதி செய்ய கட்சியின் தேசிய தலைவர் பதவியை புமியோ கிஷிடா ராஜினாமா செய்தார்.

இந்தநிலையில் ஜப்பானின் பல்வேறு இடங்களில் உள்ள ஜனநாயக லிபரல் கட்சிக்கு சொந்தமான அலுவலகங்களில் அமலாக்கத்துறை, போலீசாருடன் இணைந்து அரசு வழக்கறிஞர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.


Next Story