உலக வளர்ச்சியில் 'ஆசியான்' அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது - பிரதமர் மோடி


உலக வளர்ச்சியில் ஆசியான் அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 7 Sep 2023 2:54 AM GMT (Updated: 7 Sep 2023 4:52 AM GMT)

ஆசியான் அமைப்பில் அனைவரின் குரலும் கேட்கப்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஜகார்தா,

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் 20-வது ஆசியான்-இந்தியா மாநாடு இன்று நடைபெறுகிறது. இதேபோன்று, 18-வது கிழக்காசிய உச்சி மாநாடும் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அந்நாட்டுக்குச் சென்றுள்ளார்.

அங்கு ஜகார்தாவில் நடைபெற்ற ஆசியான்-இந்தியா மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, "இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ஆசியான்-வளர்ச்சியின் மையம் என்பதாகும். ஆசியான் அமைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இங்கு அனைவரின் குரலும் கேட்கப்படுகிறது. ஆசியான் வளர்ச்சியின் மையமாக உள்ளது. ஆசியான் அமைப்பு உலக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது" என்று தெரிவித்தார்.


Next Story