2 ஆண்டுகளுக்கு முன்பே இறந்த பெண்ணிடம் தொடர்ந்து வாடகை வசூலித்த அவலம்


2 ஆண்டுகளுக்கு முன்பே இறந்த பெண்ணிடம் தொடர்ந்து வாடகை வசூலித்த அவலம்
x

இங்கிலாந்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பே இறந்த பெண்ணிடம், தொடர்ந்து வாடகை வசூலித்த அவலம் நடந்துள்ளது.



லண்டன்,



இங்கிலாந்து நாட்டின் பெக்காம் பகுதியில் பிளாட் ஒன்றில் வசித்து வந்தவர் ஷீலா செலியோன் (வயது 58). இவர் 2 ஆண்டுகளுக்கு முன் பிப்ரவரியில் தனது பிளாட்டில் இருந்த சோபா ஒன்றில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

ஆனால், இந்த விவரம் 2 ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்படவில்லை. பிளாட்டின் வாடகையை அவர் செலுத்த தவறிய நிலையில், அதுபற்றி குடியிருப்பு அமைப்பு தீர விசாரிக்காமல், ஷீலாவின் சமூக பலன்கள் வழியே வாடகையை பெற்று வந்துள்ளது. 2020ம் ஆண்டு ஜூனில் அவருக்கு வழங்கி வந்த கியாஸ் சப்ளையையும் நிறுத்தி உள்ளனர்.

இந்நிலையில், ஷீலா உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. அவரது மரணம் பற்றி அதற்கான நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அவர் உயிரிழந்த 2 ஆண்டுகளான நிலையில், பிரேத பரிசோதனையில் மரணத்திற்கான சரியான காரணம் என்னவென்று தெரியவரவில்லை. அவருக்கு வயிற்று பகுதியில் எரிச்சல் இருந்து வந்துள்ளது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடைசியாக 2019ம் ஆண்டு ஆகஸ்டில் ஷீலா டாக்டரை பார்க்க சென்றுள்ளார். அதன்பின்பு அவரை பற்றிய தகவல் வெளிவரவில்லை. வாடகைக்கு குடியிருப்பவர் 2 ஆண்டுகளாக உயிருடன் இல்லை என்பது கூட தெரியாமல் இருந்ததற்காக வீட்டு வசதி கழகத்திற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளதுடன் அதுபற்றி தனிப்பட்ட விசாரணையும் நடந்து வருகிறது. இதற்கு அந்த அமைப்பு மன்னிப்பு கோரியுள்ளது.


Next Story