எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த சீனா-பூடான் சம்மதம்


எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த சீனா-பூடான் சம்மதம்
x

எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த சீனா-பூடான் நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளது.

பீஜிங்,

பூடான்-சீனா இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை நீடிக்கிறது. இருநாடுகளுக்கும் இடையில் தூதரக உறவுகள் இல்லாத நிலையில் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி எல்லை பிரச்சினையை தீர்க்க இருநாடுகளும் முயன்று வருகின்றன.

இந்த நிலையில் சீனா-பூடான் எல்லை பிரச்சினைகள் குறித்த 11-வது நிபுணர் குழு கூட்டம் சீனாவின் குன்மிங் நகரில் கடந்த 10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடைபெற்றது.

இதுதொடர்பாக இருநாடுகளும் நேற்று கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

11-வது நிபுணர் குழு கூட்டத்தில் ஒரு வெளிப்படையான, சுமுகமான மற்றும் ஆக்கபூர்வமான சூழ்நிலையில், சீனா-பூடான் எல்லைப் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்துவது பற்றிய ஆழமான கருத்து பரிமாற்றம் இருந்தது, மேலும் நேர்மறையான ஒருமித்த கருத்தை எட்டியது.

இவ்வாறு அந்த அறிக்கயைில் கூறப்பட்டுள்ளது.


Next Story
  • chat