பாகிஸ்தானில் அணுமின் நிலையம் அமைக்க சீனா ஒப்புதல்: ரூ.39 ஆயிரம் கோடி கடன் வழங்குகிறது


பாகிஸ்தானில் அணுமின் நிலையம் அமைக்க சீனா ஒப்புதல்: ரூ.39 ஆயிரம் கோடி கடன் வழங்குகிறது
x

கோப்புப்படம்

பாகிஸ்தானில் அணுமின் நிலையம் அமைக்க சீனா ரூ.39 ஆயிரம் கோடி கடன் வழங்குகிறது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. இந்தநிலையில் அங்குள்ள பஞ்சாப் மாகாணம் மியான்வாலி பகுதியில் சாஷ்மா-வி சீனா நிதியுதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்படுகிறது. ஆயிரத்து 200 மெகாவாட் திறன் கொண்ட இந்த அணுமின் நிலையம் அமைக்க பாகிஸ்தானுக்கு ரூ.39 ஆயிரம் கோடி சீனா கடனாக வழங்குகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் சீன அதிபர் ஜின்பிங் நேற்று கையெழுத்திட்டார்.

இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கூறுகையில், அணுமின் நிலைய ஒப்பந்தமானது பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்பாக இருக்கும். எனவே தாமதம் இன்றி இந்த திட்டம் முடிக்கப்படும் என குறிப்பிட்டார். மேலும் முக்கியமான இந்த திட்டத்தை தாமதப்படுத்தியதற்காக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அரசாங்கம் மீது அவர் கடுமையாக சாடினார்.


Next Story