சீன தலைநகர் பீஜிங் நகரில் மீண்டும் கொரோனா பரவல்: மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை


சீன தலைநகர் பீஜிங் நகரில் மீண்டும் கொரோனா பரவல்: மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை
x

சீன தலைநகர் பீஜிங் நகரில் மீண்டும் கொரோனா பரவல் காரணமாக அவசியமின்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

பீஜிங்,

சீனாவில் உகான் நகரில் 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா பெருந்தொற்று உலகமெங்கும் பரவியது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் சீனாவில் அவ்வப்போது பல நகரங்களில் தீவிரமாக பரவுகிறது.

தலைநகர் பீஜிங்கிலும் புதிய அலை எழுந்துள்ளதால், வணிகவளாகங்கள் கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

அந்த வகையில் அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜிக்ஸியாங் தியேட்டரும் இதற்கு தப்பவில்லை. இந்த தியேட்டர் 27-ந் தேதி மீண்டும் செயல்பட இருந்தது. ஆனால் அது குறிப்பிட்ட நாளில் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சீனாவில் நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்து 263 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. பீஜிங்கில் மட்டும் 515 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

பீஜிங்கில் அவசியம் இல்லாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என தடை போட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

1 More update

Next Story