சீன வெளியுறவு மந்திரி அமெரிக்காவுக்கு பயணம் செய்ய முடிவு


சீன வெளியுறவு மந்திரி அமெரிக்காவுக்கு பயணம் செய்ய முடிவு
x

சீன வெளியுறவு மந்திரி வாங் யி, வார இறுதியில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

வாஷிங்டன்,

சீன அதிபர் ஜின்பிங் அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவருடைய இந்த பயணத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேச உள்ளார். இஸ்ரேல் போர் நடந்து வரும் சூழலில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த நிலையில், சீன வெளியுறவு மந்திரி வாங் யி, இந்த வார இறுதியில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனை அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த பயணத்தின்போது, அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் ஆகியோரை வருகிற 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலான நாட்களில் சந்தித்து பேச இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும், அதிபர் பைடனை அவர் சந்தித்து பேசுவாரா? என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இதற்கு முன், சீன அதிபர் ஜின்பிங்கை பீஜிங் நகரில், பிளிங்கன் சந்தித்து பேசினார். கடந்த ஜூனில் அமைந்த பிளிங்கனின் பயணத்திற்கு பதிலாக, வாங்கின் பயணம் அமையும் என சீன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.


Next Story