இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, வெளியுறவு கொள்கை குறித்து சீன பத்திரிக்கை புகழாரம்


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, வெளியுறவு கொள்கை குறித்து சீன பத்திரிக்கை புகழாரம்
x

ரஷியா-உக்ரைன் மோதலில் இந்தியா ஒரு நுணுக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பீஜிங்,

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பொருளாதாரம், சமூக நிர்வாகம் மற்றும் வெளியுறவு கொள்கை ஆகிய துறைகளில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைப் பாராட்டி, சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை கட்டுரை வெளியிட்டுள்ளது.

இந்த கட்டுரையை ஷாங்காய் நகரில் உள்ள புடான் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வு மைய இயக்குனர் ஜாங் ஜியாடோங் எழுதியுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனைகளை எடுத்துக்காட்டும் வகையில் எழுதப்பட்டுள்ள அந்த கட்டுரையில், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சியுடன் பாரத சிந்தனையை உருவாக்குவதிலும், மேம்படுத்துவதிலும் இந்தியா அதிக நம்பிக்கையுடன் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நகர்ப்புற நிர்வாகம் மற்றும் சர்வதேச உறவுகள், குறிப்பாக சீனாவுடனான அணுகுமுறையில் மாற்றம் ஆகியவற்றை பாராட்டும் வகையில் அந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து அமெரிக்கா, ஜப்பான், ரஷியா உள்ளிட்ட நாடுகள் மற்றும் பிராந்திய அமைப்புகளுடன் இந்தியா தனது உறவுகளை மேம்படுத்தி வருவதாகவும், அதே சமயம் ரஷியா-உக்ரைன் மோதலில் இந்தியா ஒரு நுணுக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாகவும் அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.


Next Story