நியூசிலாந்தில் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருக்கும் கடைகளுக்கு ரூ.50 லட்சம் வரை அபராதம்


நியூசிலாந்தில் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருக்கும் கடைகளுக்கு ரூ.50 லட்சம் வரை அபராதம்
x

பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கும் கடைகளுக்கு சுமார் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

வெலிங்டன்,

இன்றைய உலகில் பிளாஸ்டிக் என்பது சுற்றுச்சூழலை சீர்குலைக்கும் அரக்கனாக உள்ளது. இதனால் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு பல நாடுகள் தடை விதித்து வருகின்றன. அதன்படி நியூசிலாந்து நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல் உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இரண்டாவது கட்டமாக பிளாஸ்டிக்கால் ஆன பைகள், தட்டுகள், ஸ்டிக்கர்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதனை மீறி இந்த பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கும் கடைகளுக்கு சுமார் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 150 மில்லியன் பிளாஸ்டிக் குப்பைகள் நிலத்தில் சேர்வது தடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக அந்த நாட்டின் சுற்றுச்சூழல் துறை மந்திரி டேவிட் பார்க்கர் கூறினார்.


Next Story