இந்தோனேசியாவில் திடீர் வெள்ளம்: 37 பேர் பலி


இந்தோனேசியாவில் திடீர் வெள்ளம்: 37 பேர் பலி
x

இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 37 பேர் உயிரிழந்தனர்.

ஜகர்தா,

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. கனமழை காரணமாக ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது. வெள்ளப்பெருக்குடன் எரிமலை சாம்பல் லாவாவும் பரவியது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

இந்நிலையில், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பலர் வீடுகளை இழந்தனர். சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் 37 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Next Story