ஈரானில் திடீர் வெள்ளப்பெருக்கு: 7 பேர் பலி


ஈரானில் திடீர் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 17 May 2024 11:14 PM GMT (Updated: 18 May 2024 2:26 AM GMT)

ஈரானில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

டெஹ்ரான்,

பாரசிக வளைகுடா நாடுகளில் ஒன்றான ஈரானின் கடந்த சில தினங்களாக இயல்பை காட்டிலும் அதிக அளவு மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கொரசன் ரசவி மாகாணம் மசாத் நகரில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அங்குள்ள குடியிருப்பு கட்டிடங்கள் நீரில் மூழ்கி தத்தளித்தன. மின்கம்பங்கள், மரங்கள் ஆகியவை வேரோடு பிடுங்கப்பட்டு அடித்துச்செல்லப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. 250 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் சிக்கி உயிரிழந்த 2 பேர் உள்பட ஈரானில் கனமழைக்கு இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக அந்தநாட்டின் பேரிடர் மீட்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது. காணாமல் போன 12 பேரை தேடும் பணி தீவிரமாக நடத்து வருகிறது.


Next Story
  • chat