சிரியாவில் எரிபொருள் விலை கடுமையாக உயர்வு - பொதுமக்கள் அவதி


சிரியாவில் எரிபொருள் விலை கடுமையாக உயர்வு - பொதுமக்கள் அவதி
x

சிரியாவில் போருக்குப் பின் எண்ணெய் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் பீப்பாயாக குறைந்துள்ளது.

டமாஸ்கஸ்,

சிரியா தங்கள் நாட்டில் உள்ள சில எண்ணெய் கிணறுகளுக்கான கட்டுப்பாட்டை இழந்துள்ளதால், அங்கு எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எரிபொருள் பற்றாக்குறை, குறைந்த ஊதியம் ஆகிய காரணங்களால் சிரிய மக்கள் எரிபொருள் வாங்க முடியாமல் அவதிப்படுவதாக கூறப்படுகிறது.

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் அந்நாட்டின் எண்ணெய் சேமிப்பு கிடங்கு அமைந்துள்ளது. அது தன்னாட்சி அதிகாரத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. அங்கு கச்சா எண்ணெயை நிரப்ப கடைசியாக கடந்த செப்டம்பர் 14-ந்தேதி எண்ணெய் கப்பல் சென்றது.

சிரியாவில் போருக்கு முன் நாள் ஒன்றுக்கு எண்ணெய் உற்பத்தி அளவு 3 லட்சம் பீப்பாயாக இருந்தது. ஆனால் போருக்குப் பின் நாளுக்கு 30 ஆயிரம் பீப்பாயாக குறைந்துள்ளது என்று சிரிய எண்ணெய் மற்றும் கணிம வள அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story