போப் பிரான்சிஸ் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் - பிரதமர் மோடி

கோப்புப்படம்
போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
ரோம்,
போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் இருப்பதால், அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருடைய உடல்நிலை சீராகி வருகிறது என்றும், இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து சிகிச்சை பெறுவார், என வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வரும் வாரம் நடைபெறும் புனித வார நிகழ்வுகளில் போப் பங்கேற்பது குறித்த தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'போப் பிரான்சிஸ் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்,' என்று பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story