2028-ல் சர்வதேச காலநிலை உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்த வேண்டும் - பிரதமர் மோடி பரிந்துரை


2028-ல் சர்வதேச காலநிலை உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்த வேண்டும் - பிரதமர் மோடி பரிந்துரை
x

காலநிலை சார்ந்த இலக்குகளை அடைவதில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

துபாய்,

சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ளார். இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, சர்வதேச அளவில் இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது;-

"இந்தியாவின் மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் ஆகும். ஆனால் உலகளாவிய கார்பன் வெளியேற்றத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் 4 சதவீதமாக மட்டுமே உள்ளது.

மக்கள்தொகை குறைவாக உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் மிகவும் குறைவு. காலநிலை சார்ந்த இலக்குகளை அடைவதில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.

காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா.வின் கட்டமைப்புகளை நிறைவேற்ற இந்தியா உறுதி பூண்டுள்ளது. எனவே, 2028-ல் சர்வதேச காலநிலை உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்துவதற்கு முன்மொழிகிறேன்."

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.


Next Story