சிகாகோவில் கொடூரமாக தாக்கப்பட்ட இந்திய மாணவர்


சிகாகோவில்  கொடூரமாக தாக்கப்பட்ட இந்திய மாணவர்
x

ஐதராபாத்தை சேர்ந்த அலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.

சிகாகோ [யுஎஸ்],

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் மற்றொரு துயரமான சம்பவமாக இந்திய மாணவர் ஒருவர் சிகாகோவில் நேற்று கொடூரமான தாக்குதலை எதிர்கொண்டார். இந்த தாக்குதலைத் தொடர்ந்து, சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் பாதிக்கப்பட்ட சையத் மசாஹிர் அலி மற்றும் இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தாருடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் ஐதராபாத்தை சேர்ந்த அலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.

இந்த கொடூரமான சம்பவத்தை விவரிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் வெளியான காணொளி காட்சிகளில், இந்திய மாணவர் சையத் மசாஹிர் அலி, தாக்கப்படுவதும், அதிக அளவில் ரத்தம் கொட்டியதையும் அதில் காண முடிந்தது. இதற்கிடையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் மற்றொரு வீடியோ, சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளாகத் தோன்றுகிறது, சிகாகோ தெருக்களில் அலி மூன்று தாக்குதல்காரர்களால் துரத்தப்படுவதைக் காட்டுகிறது.

கொடூரமாக இந்திய மாணவர் தாக்கப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வாரம், அமெரிக்காவில் ஸ்ரேயாஸ் ரெட்டி என்ற இந்திய மாணவர் ஓகியோவின் சின்சினாட்டி நகரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இருப்பினும் அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.


Next Story