பயங்கரவாதத்திற்கு 'அலட்சியம்' இனி ஒரு பதிலாக இருக்க முடியாது - ஆசியான் பாதுகாப்புத்துறை மந்திரிகள் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேச்சு


பயங்கரவாதத்திற்கு அலட்சியம் இனி ஒரு பதிலாக இருக்க முடியாது - ஆசியான் பாதுகாப்புத்துறை மந்திரிகள் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேச்சு
x

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுக்க சர்வதேச சமூகத்தின் அவசர மற்றும் உறுதியான தலையீடு தேவை என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பினோம் பென்,

ஆசியான் அமைப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களின் 9-வது வருடாந்திர கூட்டம் கம்போடியாவில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள இந்திய பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத் சிங், 2 நாள் பயணமாக கம்போடியா சென்றார். அங்கு நேற்று நடைபெற்ற ஆசியான் பாதுகாப்பு துறை மந்திரிகள் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

அப்போது பேசிய ராஜ்நாத் சிங், எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்பது சர்வதேச சமூகத்தின் அவசர மற்றும் உறுதியான தலையீடு தேவைப்படும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும், அதற்கு அலட்சியம் இனி ஒரு பதிலாக இருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும் பயங்கரவாத குழுக்கள் பணப்பரிமாற்றத்திற்கும், ஆதரவாளர்களை சேர்ப்பதற்கும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உலகம் முழுவதும் தொடர்புகளை உருவாக்கியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். அத்துடன் சர்வதேச சமூகத்தின் பொறுப்பான உறுப்பினராக மனிதாபிமான உதவிகள் மற்றும், உணவு தானியங்களை பெரிய அளவு விரிவுப்படுத்துவதில் இந்தியா தனது கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளது என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


Next Story