ஈரான் போராட்டத்தில் கைதானவருக்கு தூக்கு


ஈரான் போராட்டத்தில் கைதானவருக்கு தூக்கு
x

ஈரான் போராட்டத்தில் கைதானவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

டெக்ரான்,

ஈரானில் 'ஹிஜாப்' அணியாத மாஷா ஆமினி என்ற 22 வயதே ஆன இளம்பெண்ணை அந்த நாட்டின் அறநெறி போலீஸ் கைது செய்ததும், அவர் போலீஸ் காவலில் கடந்த செப்டம்பர் 16-ந் தேதியன்று, கொல்லப்பட்டதும் அங்கு பெண்களை போராட்டக்களத்தில் இறங்கி போராட வைத்தது. இந்தப் போராட்டத்தை ஈரான் அரசு ஒடுக்கியது. இதில் 475 பேர் கொல்லப்பட்டனர். 18 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த போராட்டத்தின்போது பாதுகாப்பு படை வீரர் ஒருவரை கத்தியால் தாக்கியதாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டவர் மோசென் ஷெகாரி ஆவார்.

அவருக்கு ஈரான் புரட்சிகர கோர்ட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவரைத் தூக்கில் போட்டு தண்டனையை நிறைவேற்றி உள்ளனர்.

இந்த போராட்டங்களில கைதாகி மரண தண்டனை விதித்து தூக்கில் போட்டு அதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருப்பது இதுவே முதல் முறை ஆகும். இதற்கு நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரைச் சேர்ந்த ஈரான் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குனர் மக்மூத் அமிரி மொகதாம் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Next Story