ஆப்கானிஸ்தானில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 3 பேர் தலீபான்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்


ஆப்கானிஸ்தானில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 3 பேர் தலீபான்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்
x

சம்பந்தப்பட்ட நபர்களுடன் தூதரகத் தொடர்பைப் பெற முயற்சித்து வருவதாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காபுல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சர்வதேச நாடுகளில் இருந்து தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் பணி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 3 பேரை ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்களுடன் தூதரகத் தொடர்பைப் பெற கடுமையாக முயற்சித்து வருவதாக இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் 2 பேர் கடந்த ஜனவரி மாதம் தலீபான்களால் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்றும், 3-வது நபர் எப்போது கைது செய்யப்பட்டார் என்பது தொடர்பான விவரங்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தலிபான்கள் ஒரு மூத்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மற்றும் 4 இங்கிலாந்து நாட்டினரை 6 மாதங்களுக்குப் பிறகு விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.




Next Story