அமெரிக்க டாலருக்கு நிகரான ஜப்பானின் 'யென்'மதிப்பு 32 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவு


அமெரிக்க டாலருக்கு நிகரான ஜப்பானின் யென்மதிப்பு 32 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவு
x

32 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது டாலருக்கு நிகரான ‘யென்’ மதிப்பு 150-ஐ நெருங்கியுள்ளது.

டோக்கியோ,

ஜப்பான் நாட்டின் நாணயமான 'யென்' மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பீடுகளில் கடந்த சில மாதங்களாக தொடர் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 1990-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க டாலருக்கு நிகரான 'யென்' மதிப்பு 159.8-ஆக சரிந்தது. அதனைத் தொடர்ந்து 32 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது டாலருக்கு நிகரான 'யென்' மதிப்பு 148-ஆக சரிந்துள்ளது.

ஜப்பானின் 'யென்' மதிப்பு மேலும் பலவீனமடைவதைத் தடுக்கும் வகையில் அந்நாட்டின் நிதித்துறை அமைச்சகம் புதிய கொள்கைகளை வகுக்க முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ஜப்பான் மத்திய வங்கி அவசரகால பத்திரங்களை வாங்கும் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

மேலும் நாட்டில் தற்போது மந்தமான பொருளாதார சூழல் நிலவி வருவதால், ஜப்பான் மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைந்த அளவில் வைத்திருக்க முடிவு செய்துள்ளது. அதே சமயம் டாலருக்கு நிகரான ஜப்பானின் 'யென்' மதிப்பு சரிந்துள்ளதால், ஜப்பானின் முக்கிய வர்த்தகமான காப்பி இறக்குமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பொருளாதார சூழல் குறித்து ஜப்பான் நிதி மந்திரி ஷுனிச்சி சுசுகி கூறுகையில், "அமெரிக்க டாலருக்கு நிகரான ஜப்பான் நாணய மதிப்பில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்களை ஈடு செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஜப்பான் அரசு எடுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story