பாரீசில் திடக்கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையின் செயல்பாட்டினை பார்வையிட்ட சென்னை மேயர்


பாரீசில் திடக்கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையின் செயல்பாட்டினை பார்வையிட்ட சென்னை மேயர்
x

பாரீசில் திடக்கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையின் செயல்பாட்டினை சென்னை மேயர் பிரியா பார்வையிட்டார்.

பாரிஸ்,

சென்னை மாநகராட்சியில் 10 மண்டலங்களில் குப்பைகளைக் கையாளும் பணியை தனியாரிடம் மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. மேலும், இரண்டு மண்டலங்களை ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது. இதைத் தவிர, குப்பைக் கிடங்கு இல்லாத மாநகராட்சியை உருவாக்கும் வகையில், பெருங்குடி குப்பை கிடங்கு 'பயோ மைனிங்' முறையில் அகழ்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கொடுங்கையூர் குப்பை கிடங்கும் அகழ்ந்தெடுக்கும் பணி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டில் குப்பைகளைக் கையாள பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப வசதிகள் குறித்து அறிந்து கொள்ள நான்கு நாள் பயணமாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கூடுதல் கமிஷனர் சங்கர் லால் குமவாத், தலைமை பொறியாளர் மகேசன், செயற் பொறியாளர் விஜய்அரவிந்த் ஆகியார் இத்தாலி சென்றுள்ளனர்.

இத்தாலி நாட்டில் உள்ள ரோம் நகரில் URBASER நிறுவனத்தின் திடக்கழிவு பெறப்படும் நிலையத்தை நேற்று பார்வையிட்ட அவர்கள், திடக்கழிவுகளை கையாளும் முறை மற்றும் அதன் தொழில்நுட்பம் குறித்து கேட்டறிந்தனர்.

இந்நிலையில் பாரீசில் திடக்கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையின் செயல்பாட்டினை சென்னை மேயர் பிரியா இன்று பார்வையிட்டார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "திடக்கழிவு மேலாண்மை செயல்பாடுகளைப் பார்வையிடுவதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதை தொடர்ந்து இன்று (20.6.23) பாரீசில், திடக்கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையின் செயல்பாட்டினைப் பார்வையிட்டோம்.

இந்நிகழ்வின் போது மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், கூடுதல் ஆணையர் திரு.சங்கர்லால் குமாவத், இ.ஆ.ப., மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்" என்று சென்னை மேயர் பிரியா பதிவிட்டுள்ளார்.



Next Story