மெக்சிகோவில் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி முன்பதிவு நாளை தொடக்கம்..!


மெக்சிகோவில் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி முன்பதிவு நாளை தொடக்கம்..!
x

கோப்புப்படம்

மெக்சிகோவில் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது.

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோவில் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வருகிற நாட்களில் தொடங்கப்படும் என்று தடுப்பு மற்றும் சுகாதார மேம்பாட்டுத் துறை துணைச் செயலாளர் ஹியூகோ லோபஸ் கேடெல் நேற்று தெரிவித்தார்.

மெக்சிகோ சிட்டியில் உள்ள தேசிய அரண்மனையில் செய்தியாளர்களைச் சந்தித்த லோபஸ் கேடெல், 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி முன்பதிவு நாளை முதல் தொடங்கும் என்றும் நகராட்சிகள் இந்த செயல்முறையை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட 15.4 மில்லியன் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


Next Story