கனடா சென்றுள்ள அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - விவசாய தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்த அதிகாரிகள்


கனடா சென்றுள்ள அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - விவசாய தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்த அதிகாரிகள்
x

ஒட்டாவாவில் கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார்.

ஒட்டாவா,

தமிழக அரசின் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அரசுமுறைப் பயணமாக கனடா நாட்டிற்கு சென்றுள்ளார். அவருடன் வேளாண் உற்பத்தி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கனடாவிற்கு சென்றுள்ளனர்.

அந்நாட்டின் தலைநகர் ஒட்டாவாவில், கனடா நாட்டிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது கனடாவில் பயன்படுத்தப்பட்டு வரும் விவசாய தொழில்நுட்பங்கள் குறித்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.


1 More update

Next Story