டுவிட்டரை நிர்வகிப்பது மிகவும் வலி மிகுந்தது - டுவிட்டர் தலைவர் எலான் மஸ்க்


டுவிட்டரை நிர்வகிப்பது மிகவும் வலி மிகுந்தது - டுவிட்டர் தலைவர் எலான் மஸ்க்
x

டுவிட்டரை நிர்வகிப்பது மிகவும் வலி மிகுந்தது என்று டுவிட்டர் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

டுவிட்டர், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும் உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் டுவிட்டர் ஸ்பேஸ் மூலம் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு இன்று பேட்டியளித்தார்.

அப்போது டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியது குறித்து எலான் மஸ்க் கூறியதாவது, நான் சில நேரங்களில் சான் பிரான்சிஸ்கோ டுவிட்டர் அலுவலகத்தில் உள்ள இருக்கையில் தூங்கியுள்ளேன். டுவிட்டரை வாங்கியபோது தொடக்கத்தில் குறைந்த விளம்பர வருவாய் தற்போது திரும்ப வந்துகொண்டிருக்கிறது.

தற்போதைய நிலை தொடர்ந்தால் நடப்பு காலாண்டில் டுவிட்டரில் வருமானம் நன்றாக இருக்கும். ஊழியர்களை பணி நீக்கம் செய்வது சாதாரண விஷயம் அல்ல. செலவை குறைக்கவில்லையென்றால் நிறுவனம் திவாலாகிவிடும். மொத்த நிறுவனமும் மூழ்கிவிட்டால் யாருக்கும் வேலை கிடைக்காது. டுவிட்டர் நிறுவனத்தை நிர்வகிப்பது மிகவும் வலி மிகுந்தது. இது ஒன்றும் ஒரு பார்ட்டி நடத்துவது போன்றதல்ல. ஆனாலும், அதை செய்தாகவேண்டியுள்ளது' என்றார்.


Next Story