அமெரிக்காவில் தீபாவளி பண்டிகையன்று பள்ளிகளுக்கு விடுமுறை


அமெரிக்காவில் தீபாவளி பண்டிகையன்று பள்ளிகளுக்கு விடுமுறை
x

கோப்புப்படம்

அமெரிக்காவில் தீபாவளி பண்டிகையன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் மசோதா அறிமுகப்பட்டுத்தப்பட்டது.

வாஷிங்டன்,

தீபங்களின் திருவிழா என்று அழைக்கப்படும் தீபாவளி பண்டிகை இந்தியா மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர் என பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. அதேபோல் கடந்த ஆண்டு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையிலும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் தீபாவளிக்கு அரசு விடுமுறை அளிக்கும் சட்டத்தை முதன் முதலாக பென்சில்வேனியா மாகாணம் இயற்றியது.

இந்தநிலையில் நியூயார்க் மாகாண நிர்வாக சபை உறுப்பினரும், இந்திய வம்சாவளியுமான ஜெனிபர், தீபாவளி பண்டிகையன்று அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் மசோதாவை அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா செனட் சபை மற்றும் நிர்வாக சபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக இந்த சட்டத்தை நிறைவேற்றும் முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில் தற்போது நிர்வாக சபையின் ஒப்புதலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story