தென் கொரிய ராணுவம் மீது வடகொரியா ஏவுகணை தாக்குதல்

Image Courtesy : AFP
வடகொரிய ராணுவத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
சியோல்,
மஞ்சள் கடல் பகுதியில் தென் கொரிய ராணுவத்தை நோக்கி வடகொரியா இன்று காலை ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தென் கொரிய ராணுவத்தின் கூட்டுப்படைத் தலைவர் தெரிவித்துள்ளார். கப்பல்கள் மூலம் இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலின் விவரங்கள் குறித்து தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் உளவுத்துறையினர் ஆய்வு செய்து வருவதாகவும், வடகொரிய ராணுவத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story






