காலிஸ்தான் பயங்கரவாதி கொலை செய்யப்பட்ட விவகாரம்: 'இது இந்தியாவின் கொள்கை அல்ல' - வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேச்சு


காலிஸ்தான் பயங்கரவாதி கொலை செய்யப்பட்ட விவகாரம்: இது இந்தியாவின் கொள்கை அல்ல - வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேச்சு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 27 Sep 2023 8:08 PM GMT (Updated: 28 Sep 2023 6:25 AM GMT)

காலிஸ்தான் பயங்கரவாதி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான கேள்விக்கு இது இந்தியாவின் கொள்கை அல்ல என்று வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பதிலளித்தார்.

நியூயார்க்,

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் அவர் ஐ.நா. பொதுசபையின் 72-வது கூட்டத்தொடரில் பங்கேற்று உரையாற்றினார். அதனை தொடர்ந்து, வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜெய்சங்கர் பங்கேற்று பேசினார். அப்போது அவரிடம் கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ குற்றம் சாட்டியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:-

காலிஸ்தான் பயங்கரவாதி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவர்கள் குற்றம் சாட்டிய வகையிலான செயல்களில் ஈடுபடுவது இந்திய அரசின் கொள்கையே அல்ல. இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.


Next Story