பாகிஸ்தான்: 3 மாதங்களாக பலாத்காரம்; தந்தையை சுட்டு கொன்ற மகள்


பாகிஸ்தான்:  3 மாதங்களாக பலாத்காரம்; தந்தையை சுட்டு கொன்ற மகள்
x

பாகிஸ்தானில் 3 மாதங்களாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட தந்தையை 14 வயது மகள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.

பஞ்சாப்,

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் லாகூர் நகரில் குஜ்ஜார்புரா பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி மீது கொலை குற்றச்சாட்டு பதிவானது. அந்த சிறுமி, துப்பாக்கியை பயன்படுத்தி அவருடைய தந்தையை சுட்டு கொன்றுள்ளார்.

இதுபற்றி விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரி சொஹைல் கஸ்மி கூறும்போது, அந்த சிறுமி 3 மாதங்களாக நரக வேதனையை அனுபவித்து உள்ளார். கடந்த 3 மாதங்களாக சிறுமியை, அவருடைய தந்தை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால், தந்தையை கொலை செய்வது என முடிவு செய்து, அவருடைய துப்பாக்கியை கொண்டு சுட்டுள்ளார் என கஸ்மி கூறியுள்ளார். அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வழக்கு ஒன்று பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

லாகூரில் இன அடிப்படையிலான வன்முறை கோர்ட்டு ஒன்றில், சிறுமியான மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட மறுநாள் இந்த சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளது. கூடுதல் செசன்ஸ் நீதிபதி மியான் சாஹித் ஜாவித், குற்றவாளியான ரபீக்குக்கு கடந்த வெள்ளி கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.


Next Story