பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வுக்கு எதிராக மக்கள் போராட்டம்


பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வுக்கு எதிராக மக்கள் போராட்டம்
x

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அங்கு பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதன்படி பாகிஸ்தானில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.209.86 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.204.15 ஆகவும் உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். லாகூர், கராச்சி, இஸ்லாமாபாத் உள்ளிட்ட இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதைபோல், பாகிஸ்தான் அரசு ஊழியர்கள், தங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்த வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

1 More update

Next Story