ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு


ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 16 Jan 2024 9:17 AM IST (Updated: 16 Jan 2024 11:46 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது.

ரஷிய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தை நல்ல விதமாக இருந்தது. இரு நாடுகளிடையே நட்புறவை மேலும் வலுப்படுத்துவதில் சாதகமான எதிர்கால திட்டங்கள், முன்னேற்றங்கள், பிரிக்ஸ் மாநாட்டிற்கான தலைமையை ரஷ்யா ஏற்றுள்ளது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். உலகளாவிய பிரச்சனைகளில் பயனுள்ள கருத்துப் பரிமாற்றமும் இருந்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story