நேட்டோ உச்சி மாநாடு: லிதுவேனியாவுக்கு சிறப்பு படைகளை அனுப்பும் போலந்து


நேட்டோ உச்சி மாநாடு: லிதுவேனியாவுக்கு சிறப்பு படைகளை அனுப்பும் போலந்து
x

வருகிற 11 மற்றும் 12-ந் தேதிகளில் லிதுவேனியா தலைநகர் வில்னியசில் நேட்டோ உச்சிமாநாடு நடைபெற உள்ளது.

உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோ 1949-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் கொள்கையை அறிமுகப்படுத்தவும், புதிய உறுப்பினர்களை சேர்க்கவும் அவ்வப்போது நேட்டோ உச்சி மாநாடு நடத்தப்படுகிறது. அதன்படி வருகிற 11 மற்றும் 12-ந் தேதிகளில் லிதுவேனியா தலைநகர் வில்னியசில் நேட்டோ உச்சிமாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்வதால் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் லிதுவேனியா உள்ளது. எனவே வருகிற 17-ந் தேதி வரை அங்கு சிறப்பு படைகளை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் போலந்து அதிபர் ஆண்ட்ரேஜ் டுடா கையெழுத்திட்டுள்ளார்.

இந்த சிறப்பு படைப்பிரிவில் 75-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், எம்.ஐ-17 ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை அடங்கும். இவை லிதுவேனியா வான்பாதுகாப்பை உறுதிசெய்வதோடு, பொதுமக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் என போலந்து அரசாங்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


Next Story