இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர்: ஜோ பைடனுடன் போப் பிரான்சிஸ் பேச்சுவார்த்தை


இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர்: ஜோ பைடனுடன் போப் பிரான்சிஸ் பேச்சுவார்த்தை
x

Image Courtacy: AFP

தினத்தந்தி 23 Oct 2023 8:16 PM GMT (Updated: 24 Oct 2023 9:45 AM GMT)

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் போப் பிரான்சிஸ் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

வாடிகன்,

இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் போர் இன்று 18வது நாளாக நீடித்து வருகிறது.

போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனுடன், போப் பிரான்சிஸ் தொலைபேசி வாயிலாக பேச்சு வார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையின் போது இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் செய்வதற்கான முயற்சி எடுக்குமாறு போப் வலியுறுத்தினார். உலகம் அமைதியை நோக்கி திரும்புவதற்கான கூட்டு முயற்சி எடுக்கவும் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் 27-ஆம் தேதி உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்த போப் பிரான்சிஸ் திட்டமிட்டுள்ளார் என்றும் ஜோ பைடனைத்தொடர்ந்து ஐரோப்பிய அரபு தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் வாடிகன் தேவாலயம் தெரிவித்துள்ளது.


Next Story