ரஷிய சிறுபான்மையினர் குறித்து போப் பிரான்சிஸ் கூறிய கருத்து; வாட்டிகன் மன்னிப்பு கேட்டதாக ரஷியா தகவல்


ரஷிய சிறுபான்மையினர் குறித்து போப் பிரான்சிஸ் கூறிய கருத்து; வாட்டிகன் மன்னிப்பு கேட்டதாக ரஷியா தகவல்
x

உக்ரைன் மக்கள் மீது ரஷியாவின் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்துவதாக போப் பிரான்சிஸ் கூறியிருந்தார்.

மாஸ்கோ,

உக்ரைன்-ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என போப் பிரான்சிஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும், தேவைப்பட்டால் ரஷிய அதிபரை நேரில் சந்தித்து பேச தயாராக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் நேர்காணல் ஒன்றில் உக்ரைன் மீதான போர் குறித்து போப் பிரான்சிஸ் பேசினார். அப்போது அவர், உக்ரைன் மக்கள் மீது ரஷிய வீரர்கள் சிலர் தாக்குதல் நடத்துவதாகவும், அவ்வாறு தாக்குதல் நடத்துவபர்கள் ரஷிய பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல, மாறாக செச்சென்ஸ், புரியாட்ஸ் போன்ற சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.

போப்பின் கருத்திற்கு ரஷ்யா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் போப் பிரான்சிஸ் பேசிய கருத்துக்கு வாட்டிகன் மன்னிப்பு கோரியதாக ரஷியா தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி மரியா சகாரோவ், வாட்டிகன் மன்னிப்பு கோரியதால் இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வந்ததாகவும், இனி வரும் காலங்களில் ரஷியா மற்றும் வாட்டிகன் இடையே ஆரோக்கியமான உறவுமுறை நீடிக்கும் என்றும் தெரிவித்தார்.


Next Story