போருக்கு ஆயத்தமாக வேண்டும் : வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்


போருக்கு ஆயத்தமாக வேண்டும் : வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்
x

வடகொரியாவில் உள்ள ராணுவ பல்கலைக்கழகத்தை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் நேற்று ஆய்வு செய்தார்.

பியாங்யாங்,

போருக்கு தயாராகுமாறு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியுள்ளது கொரிய தீப கற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் அடாவடி போக்கை கையாண்டு வருபவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் மோதி வரும் கிம் ஜாங் உன், உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து அணு ஆயுத சோதனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், வடகொரியாவின் ராணுவ பல்கலைக்கழகத்தை கிம் ஜாங் உன் நேற்று ஆய்வு செய்த பிறகு பேசியது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கிம் ஜாங் உன் கூறுகையில், "வடகொரியாவை சுற்றி நிலைத்தன்மையற்ற அரசியல் சூழல் உள்ளது. எனவே, கடந்த காலத்தைக் காட்டிலும் இப்போது போருக்கு ஆயத்தமாக வேண்டியுள்ளது" என்றார்.

முன்னதாக, அமெரிக்காவும் தென் கொரியாவும் இராணுவ பயிற்சிகளை அதிகளவில் மேற்கொள்கிறது. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் அதிகரித்திருப்பதாக வடகொரியா கூறிய நிலையில், கிம் ஜாங் உன் மேற்கண்டவாறு பேசியுள்ளார்


Next Story