இந்தியா தலைமையிலான ஷாங்காய் மாநாட்டில் காணொளி மூலம் பங்கேற்கும் சீன அதிபர்


இந்தியா தலைமையிலான ஷாங்காய் மாநாட்டில் காணொளி மூலம் பங்கேற்கும் சீன அதிபர்
x

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்கு இந்தியா தலைமை வகித்து வருகிறது.

பீஜிங்,

இந்தியா, ரஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.

இதனிடையே, இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு அமைப்பிற்கு இந்தியா தலைமை வகிக்கிறது. இந்தியா தலைமை வகிக்கும் நிலையில் இந்த கூட்டமைப்பின் மந்திரிகள் மட்டத்திலான மாநாடு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை உள்பட பல்வேறு துறை மந்திரிகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பு நாடுகளை சேர்ந்த மந்திரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் மாநாடு வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், இந்த அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜிங்பிங் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜிங்பிங் காணொளி காட்சி மூலம் பங்கேற்க உள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்கு இந்தியா தலைமையேற்ற பின் இந்த அமைப்பின் மாநாட்டில் சீன அதிபர் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

கடந்த 2020ம் ஆண்டு நடந்த கல்வான் மோதலுக்கு பின் இந்தியா - சீனா இடையேயான உறவில் விரிசல் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story