பாஸ்போர்ட் பெற்ற விவகாரம்: இலங்கை மந்திரி மீது விசாரணைக்கு உத்தரவு


பாஸ்போர்ட் பெற்ற விவகாரம்: இலங்கை மந்திரி மீது விசாரணைக்கு உத்தரவு
x

பாஸ்போர்ட் பெற்ற விவகாரம் தொடர்பாக இலங்கை மந்திரி மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு,

இலங்கை மந்திரி டயானா கேமேஜ், இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர். இருப்பினும், இலங்கை பாஸ்போர்ட் பெற்றுள்ளார்.

சமீபத்தில், இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் எம்.பி. ஆவதை தடை செய்வதற்கான அரசியல் சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து, டயானா கேமேஜுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா, கொழும்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த தலைமை மாஜிஸ்திரேட்டு டயானா கேமேஜ் எப்படி இலங்கை பாஸ்போர்ட் பெற்றார் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு குற்ற புலனாய்வு துறைக்கு உத்தரவிட்டார்.


Next Story