இலங்கை காலிமுகத்திடலில் அதிபருக்கு எதிரான போராட்டம் - தற்காலிகமாக கைவிடுவதாக அறிவிப்பு


இலங்கை காலிமுகத்திடலில் அதிபருக்கு எதிரான போராட்டம் - தற்காலிகமாக கைவிடுவதாக அறிவிப்பு
x

காலிமுகத்திடலில் இருந்து வெளியேறுவதால் போராட்டம் முடிந்து விட்டதாக கருத வேண்டாம் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு,

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உணவு, எரிபொருள், மருந்து உள்ளிட்ட அன்றாட தேவைகளை பெற முடியாமல் மக்கள் கடும் பாதிப்பிற்கு ஆளான நிலையில், அங்கு போராட்டம் வெடித்தது.

இலங்கை அதிபர் மாளிகைக்கு எதிரே காலிமுகத்திடலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அங்கேயே கூடாரங்களை அமைத்து தங்கினர். இதற்கிடையே இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பியோடினார். அதனை தொடர்ந்து இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் பதவி ஏற்ற மறுநாளே காலிமுகத்திடலில் இருந்த போராட்டக்காரர்கள் கூடாரங்களை போலீசார் அகற்றியதால் மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல வேண்டும் என்று ரணில் விக்ரமசிங்கே கேட்டுக் கொண்டார். ஆனாலும் போராட்டக்காரர்கள் அங்கேயே தொடர்ந்து இருந்தனர்.

இந்த நிலையில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுததாகவும், கொழும்பு காலிமுகத்திடலில் இருந்து வெளியேறுவதாகவும் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். ஆனால் காலிமுகத்திடலில் இருந்து வெளியேறுவதால் போராட்டம் முடிந்து விட்டதாக கருத வேண்டாம் எனவும், இலங்கை அரசுக்கு எதிராக புதிய வடிவில் போராட்டத்தை தொடரப்போவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story