இலக்குகள் எட்டும் வரை உக்ரைனில் அமைதியை எதிர்பார்க்க முடியாது - புதின் சூளுரை


இலக்குகள் எட்டும் வரை உக்ரைனில் அமைதியை எதிர்பார்க்க முடியாது - புதின் சூளுரை
x
தினத்தந்தி 15 Dec 2023 10:53 PM IST (Updated: 15 Dec 2023 10:53 PM IST)
t-max-icont-min-icon

போரில் நமது படைகள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகின்றன.

மாஸ்கோ,

உலகின் வலிமையான ராணுவ கூட்டமைப்பாக கருதப்படும் நேட்டோ அமைப்பில் இணைய முயன்றதால் உக்ரைன் நாட்டின் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா போர் தொடுத்தது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகியும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.மாறாக போரை மேலும் தீவிரப்படுத்துவதற்கான முயற்சியில் ரஷியா ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் ரஷியா தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஆண்டு இறுதி செய்தி மாநாட்டில் பேசிய அதிபர் புதின், " போரில் வெற்றி நமதாக இருக்கும்.

நாங்கள் எங்கள் இலக்குகளை அடையும்போது அமைதி இருக்கும். அதுவரை உக்ரைனில் அமைதியை எதிர்பார்க்க முடியாது. போரில் நமது படைகள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகின்றன. எதிரி (உக்ரைன்) தனது மேற்கத்திய ஆதரவாளர்களுக்கு சில வெற்றிகளை காண்பிப்பதற்காக தனது துருப்புகளை தியாகம் செய்து வருகிறது. ஆனால் எதிரி எதையும் சாதிக்கவில்லை" என்றார்.

1 More update

Next Story