சீனாவில் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழப்பு


சீனாவில் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழப்பு
x

சீனாவில் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.

பீஜிங்,

தெற்கு சீனாவின் குவாங்சி ஜுவாங் பிராந்தியம் பிங்குவோ நகரில் அலுமினிய தொழிற்சாலை ஒன்று செயல்படுகிறது. இங்கு வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அலுமினிய கம்பிகளை வெளியேற்றும் சமயத்தில் உயர் வெப்பநிலை காரணமாக பாய்லர் வெடித்து சிதறியது.

இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். எனினும் இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்புபடையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

1 More update

Next Story