லண்டனில் 'கோ பூஜை' செய்த ரிஷி சுனக்-அக்‌ஷதா மூர்த்தி தம்பதி


லண்டனில் கோ பூஜை செய்த ரிஷி சுனக்-அக்‌ஷதா மூர்த்தி தம்பதி
x

ரிஷி சுனக்கும், அவரது மனைவி அக்‌ஷதா மூர்த்தியும் சேர்ந்து லண்டனில் பசு மாட்டுக்கு ‘கோ பூஜை’ செய்தனர்.

லண்டன்,

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சான் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்தின் பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக்கும், அவரது மனைவி அக்‌ஷதா மூர்த்தியும் சேர்ந்து லண்டனில் பசு மாட்டுக்கு 'கோ பூஜை' செய்தனர். கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு நடைபெற்ற இந்த கோ பூஜை தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

லண்டனில் உள்ள பக்திவேதாந்தா மனோர் கோவிலில் வைத்து இந்த கோ பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. பூஜையின் போது பசு மாட்டிற்கு ஆரத்தி காண்பித்து குங்குமம் வைத்து ரிஷி சுனக்கும், அக்‌ஷதா மூர்த்தியும் வழிபட்டனர்.


Next Story