வங்காளதேசம்: குளத்திற்குள் பஸ் கவிழ்ந்து விபத்து - 17 பேர் பலி


வங்காளதேசம்: குளத்திற்குள் பஸ் கவிழ்ந்து விபத்து - 17 பேர் பலி
x

வங்காளத்தில் பஸ் குளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

டாக்கா,

வங்காளதேச நாட்டின் பரிஸ்ஹல் மாகாணதின் பண்டாரியா நகரில் இருந்து 60 பயணிகளுடன் பரிஸ்ஹல் நகர் நோக்கி இன்று பஸ் சென்றுகொண்டிருந்தது.

ஜலாக்தி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் அருகே இருந்த குளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சுக்குள் இருந்த் அனைவரும் குளத்திற்குள் மூழ்கினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் பஸ்சுக்குள் சிக்கிய பயணிகளை மீட்டனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் இந்த விபத்தில் பயணிகள் 17 பேர் உயிரிழந்தனர். வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்த நிலையில் ஆறு, குளங்களில் நீர் இருப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story