#லைவ் அப்டேட்ஸ்: போர் தொடங்கி 100 நாள்: உக்ரைனில் ஐந்தில் ஒரு பகுதியை கைப்பற்றியது ரஷியா - ஜெலன்ஸ்கி ஒப்புதல்


#லைவ் அப்டேட்ஸ்: போர் தொடங்கி 100 நாள்: உக்ரைனில் ஐந்தில் ஒரு பகுதியை கைப்பற்றியது ரஷியா - ஜெலன்ஸ்கி ஒப்புதல்
x

Image Courtacy: AFP

தினத்தந்தி 2 Jun 2022 9:46 PM GMT (Updated: 3 Jun 2022 3:14 PM GMT)

போர் தொடங்கி 100 நாள் ஆகும்நிலையில், உக்ரைனில் ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா கைப்பற்றி உள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஒப்புக்கொண்டார்.


Live Updates

  • 3 Jun 2022 3:14 PM GMT

    நாட்டின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் கொடூரமான சண்டைகள் நடக்கின்றன ,மாஸ்கோ ஆதரவு பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த டான்பாஸ் பகுதிகளிலிருந்து ரஷியா படைகள் மக்களைத் திரட்டி, முதல் வரிசை தாக்குதலில் அவர்களை போருக்கு அனுப்புவதாகவும், அவர்களுக்குப் பின்னால் ரஷியா படைகள் வருவதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறினார்.

    போர் நீண்ட காலம் நீடிக்கிறது, ரஷியா மோசமான, மற்றும் இழிந்த விஷயங்களை" ரஷியா செய்து கொண்டிருக்கிறது.மேலும் மேம்பட்ட ராக்கெட் அமைப்புகளை அனுப்ப ஒப்புக்கொண்டதற்காக அமெரிக்காவிற்கு நன்றி தெரிவிப்பதாக ஜெலென்ஸ்கி கூறினார்.

  • 3 Jun 2022 11:39 AM GMT

    உக்ரைன் - ரஷியா இடையேயான போர் 100 நாட்களை கடந்தும் நீடித்து வருகிறது. உக்ரைனின் பல முக்கிய நகரங்களை கைப்பற்றியிருக்கும் ரஷியா, தொடர்ந்து அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. மாதக்கணக்கில் நீடிக்கும் ரஷியா- உக்ரைன் போர் சர்வதேச அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், உக்ரைனுடனான போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து ரஷிய செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், “ உக்ரைன் விவகாரத்தில் தனது அனைத்து இலக்குகளையும் எட்டும் வரை ரஷியா தனது ராணுவ நடவடிக்கையை தொடரும்” என்றார்.

  • 3 Jun 2022 8:09 AM GMT

    உக்ரைனின் லூகன்ஸ் நகரம் முழுவதையும் இன்னும் 2 வாரத்திற்குள் ரஷியா தனது கட்டுப்பாடிட்ன் கீழ் கொண்டுவந்துவிடும் என்று இங்கிலாந்து பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

  • 3 Jun 2022 5:25 AM GMT

    ரஷியாவின் பசிபிக் கடற்படை 40 க்கும் மேற்பட்ட கப்பல்கள் மற்றும் 20 விமானங்கள் வரை பங்கேற்கும் ஒரு வார கால தொடர் பயிற்சிகளை ஆரம்பித்து உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி ரஷிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

  • 3 Jun 2022 12:32 AM GMT


    உக்ரைனின் செவெரோடோனெட்ஸ்கில் நிலைமை கடினமாக உள்ளது - ஜெலென்ஸ்கி

    செவெரோடோனெட்ஸ்கில் நிலைமை "இப்போது மிகவும் கடினமாக உள்ளது. அத்துடன் அருகிலுள்ள நகரங்களும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக ஜெலென்ஸ்கி கூறினார்.

    மேலும் லிசிசான்ஸ்க், பாக்முட் மற்றும் பல நகரங்கள் சக்திவாய்ந்த ரஷிய ராணுவ தாக்குதலை எதிர்கொள்கின்றன என்று அவர் தேசத்திற்கு தனது நேற்றைய இரவு வீடியோ உரையில் கூறினார்.

    ரஷியப் படைகள் ஏற்கனவே தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த டான்பாஸ் பகுதிகளிலிருந்து மக்களைத் திரட்டி முதல் வரிசை தாக்குதலில் அவர்களை போருக்கு அனுப்புவதாகவும், அவர்களுக்குப் பின்னால் ரஷிய ராணுவம் வருவதாகவும் ஜெலென்ஸ்கி கூறினார்.

    "போர் நீண்டுகொண்டே போகிறது, ரஷியாவின் வரலாற்றில் இன்னும் மோசமான, வெட்கக்கேடான மற்றும் இழிந்த விஷயங்கள் என்றென்றும் பொறிக்கப்பட்டு கொண்டிருக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.

  • 3 Jun 2022 12:08 AM GMT


    உக்ரைன் துறைமுகங்களில் உணவு தானியங்கள் ஏற்றுமதியை மீண்டும் தொடங்கும் வகையில் அங்கு ரஷிய படையினரின் முற்றுகையை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகளுடன் சேர்ந்து செயல்பட்டு வருவதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் கூறி உள்ளது.

    உக்ரைனின் ‘சு-25’ ரக விமானத்தை மைக்கோலேவ் பிராந்தியத்தில் ரஷிய விமானப்படையினர் துல்லியமாக சுட்டு வீழ்த்தினர்.

    240 உக்ரைன் படை வீரர்களை கொன்றதுடன், 39 ராணுவ இலக்குகளை அழித்துள்ளதாகவும் ரஷியா கூறுகிறது.

    ரஷியாவின் கைகளுக்கு சென்றுவிட்ட மரியுபோல் நகரில், ரஷிய அதிகாரிகளுடன் ஒத்துழைக்க மறுக்கிற உக்ரைன் தன்னார்வலர்கள் சிறை பிடிக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்படுவதாக பி.பி.சி. கண்காணிப்பு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

  • 2 Jun 2022 11:33 PM GMT


    உக்ரைனில் வினியோக மையமாக விளங்கி வருகிற மேற்கு லிவிவ் பகுதியில் நடத்தப்பட்ட ரஷிய ஏவுகணைத்தாக்குதலில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதற்கிடையே அமெரிக்காவில் புரூக்ளின் நகரில் உள்ள ‘பார்’ ஒன்றில் உக்ரைன்வாசி ஒருவர், ரஷியர் எனக் கருதி தனது நாட்டினர் ஒருவரை முகத்திலும், கழுத்திலும் பீர் பாட்டிலால் குத்தி அது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

    செவரோடொனெட்ஸ்க் நகரில் 80 சதவீத பகுதி ரஷியா கைகளுக்கு போய்விட்டது. அந்த நகரின் பாதுகாப்பு கோட்டை தகர்க்க எல்லா திசைகளில் இருந்தும் ரஷிய படையினர் தாக்குதல் நடத்துகின்றனர்.

  • 2 Jun 2022 10:54 PM GMT


    நேட்டோ என்னும் பாதுகாப்பு கூட்டணியில் உக்ரைன் சேர்ந்து, பாதுகாப்பு தேடிக்கொள்வதற்கு எதிராக ரஷியா போர்க்கொடி உயர்த்தியது. கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி, சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் ராணுவ கட்டமைப்புகளின் மீது ரஷியா தாக்குதல் தொடங்கியது.

    தலைநகர் கீவை கைப்பற்ற முடியாத நிலையில் மரியுபோல் போன்ற சில நகரங்களை, கிராமங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. உக்ரைன் போர் இன்று 100-வது நாளை எட்டுகிற நிலையில் தற்போது அதன் கவனம், கிழக்கு உக்ரைனில் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய 2 பகுதிகளும் அடங்கிய டான்பாஸ் மீது திரும்பி உள்ளது.

    இதனால் இந்தப் பகுதியைச் சேர்ந்த 18 ஆயிரத்து 800 பேர் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். அவர்களில் 2,663 பேர் குழந்தைகள் ஆவார்கள்.

    உக்ரைன் போர் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை 15 லட்சம் பேர் உக்ரைனை விட்டு வெளியேறி உள்ளனர். 2.5 லட்சம் குழந்தைகள் ரஷியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

    2 லட்சம் குழந்தைகள் வலுக்கட்டாயமாக ரஷியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். இந்தப் போரில் இதுவரை 243 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். 446 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

  • 2 Jun 2022 9:47 PM GMT


    கீவ்,

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 100-வது நாள் ஆகும். இந்த போரில் உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா கைப்பற்றி உள்ளது. இதை அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஒப்புக்கொண்டார்.

    லக்சம்பார்க் நாடாளுமன்றத்தில் அவர் காணொலிக்காட்சி வழியாக உரையாற்றினார். அப்போது அவர் கூறும்போது, “உக்ரைனின் 1 லட்சத்து 25 ஆயிரம் ச.கி.மீ. பகுதி தற்போது ரஷியாவின் கைகளுக்கு போய் உள்ளது. இதில் கிரீமியா, கிழக்கு உக்ரைன் பகுதிகள் அடங்கும்” என தெரிவித்தார்.


Next Story