உக்ரைனின் தாக்குதலை எதிர்க்க ரஷியா அனைத்து வளங்களையும் பயன்படுத்துகிறது: ஜெலன்ஸ்கி


உக்ரைனின் தாக்குதலை எதிர்க்க ரஷியா அனைத்து வளங்களையும் பயன்படுத்துகிறது: ஜெலன்ஸ்கி
x

நமது தாக்குதலை எதிர்கொள்ள ரஷியா தன்னிடமுள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்துவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

கீவ்,

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தனது நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் நமது தாக்குதலை எதிர்கொள்ள ரஷியா தன்னிடமுள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி வருகிறது. முன்னேறும் ஒவ்வொரு 1,000 மீட்டருக்கும் நாம் நமது போர் படைப்பிரிவின் ஒவ்வொருவருக்கும் நன்றி கூற வேண்டும்.

தற்போது பெரிய அளவிலான அச்சுறுத்தல்கள் பெலாரஸ் பகுதியில் இருந்து இல்லை என முக்கியமான அறிக்கை கிடைத்துள்ளது. அங்குள்ள நிலவரத்தை நான் உன்னிப்பாகக் கண்காணிக்கிறேன். ஆனால் எனது முழு கவனமும் தற்போது போரின் முன்வரிசையை குறித்தே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story