அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு- 9 பேர் உயிரிழப்பு


அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு- 9 பேர் உயிரிழப்பு
x

Image Credit : AP

தினத்தந்தி 7 May 2023 7:30 AM IST (Updated: 7 May 2023 8:28 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவின் வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்து இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ் என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள வணிக வளாகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் வணிக வளாகத்தில் இருந்த குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிந்து இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.துப்பாகிச்சூடு நடத்தியவரும் உயிரிழந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெக்சாஸ் மாகாணத்தில் எந்த வித பயிற்சியும் உரிமமும் இன்றி யார் வேண்டும் எனாலும் துப்பாக்கி வைத்துக்கொள்ள சட்டம் அனுமதி அளிக்கிறது. அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருவதால் துப்பாக்கி பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என குரல் எழுந்தது. எனினும், அமெரிக்க நாடாளுமன்றத்தில் இது தொடர்பான சட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை.

1 More update

Next Story