சாக்லேட், ஷாம்பூ உள்பட 300 பொருட்கள் இறக்குமதிக்கு தடை இலங்கை நடவடிக்கை


சாக்லேட், ஷாம்பூ உள்பட 300 பொருட்கள் இறக்குமதிக்கு தடை  இலங்கை நடவடிக்கை
x
தினத்தந்தி 24 Aug 2022 11:15 PM GMT (Updated: 24 Aug 2022 11:15 PM GMT)

அன்னிய செலாவணி பற்றாக்குறையால் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் இலங்கை தவிக்கிறது.

கொழும்பு,

அன்னிய செலாவணி பற்றாக்குறையால் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் இலங்கை தவிக்கிறது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது.

இந்தநிலையில், பொருளாதாரத்தை சீரமைக்கும் நடவடிக்கையாக 300 நுகர்வோர் பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை தடை விதித்துள்ளது. இதற்கான சிறப்பு அறிவிப்பாணையை இலங்கை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

சாக்லேட், ஷாம்பூ, வாசனை திரவியங்கள், ஒப்பனை பொருட்கள் உள்பட நுகர்வோர் பயன்படுத்தும் 300 பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது.

அதே சமயத்தில், ஆகஸ்டு 23-ந் தேதிக்கு முன்பு கப்பலில் ஏற்றப்பட்டு, செப்டம்பர் 14-ந் தேதிக்குள் இலங்கையை வந்தடையும் பொருட்களுக்கு இத்தடை பொருந்தாது என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது.


Next Story