போலீசார்-பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டையில் பறிபோன மாணவர்களின் உயிர்


போலீசார்-பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டையில் பறிபோன மாணவர்களின் உயிர்
x
தினத்தந்தி 24 Nov 2023 11:04 AM GMT (Updated: 24 Nov 2023 1:30 PM GMT)

பைகர் பாக்துன்க்வா மாகாணத்தின் கோட் ஆசம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது.

பெஷாவர்:

பாகிஸ்தானின் பைகர் பாக்துன்க்வா மாகாணத்தின் டேங்க் மாவட்டம், கோட் ஆசம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதிக்கு சென்று பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்தனர்.

அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி தப்பிக்க முயன்றனர். போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சண்டையில், போலீசாரால் தேடப்பட்ட ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 8ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியாகினர்.

பயங்கரவாதி பயன்படுத்திய துப்பாக்கி, தோட்டாக்கள், கையெறி குண்டுகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.


Next Story